ஈரோடு: 5 வயது சிறுவன் பலியான விவகாரம்.. அதிரடி நடவடிக்கை

821பார்த்தது
ஈரோடு: 5 வயது சிறுவன் பலியான விவகாரம்.. அதிரடி நடவடிக்கை
ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி அருகே அங்கன்வாடி மையத்தில் இருந்து காணாமல்போன சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் அங்கன்வாடி பணியாளர் லாவன்யா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சக்கரவர்த்தி - சாந்தகுமாரி தம்பதியின் மகனான சஞ்சய் (6 வயது), கடந்த நவ.5 அன்று அங்கன்வாடிக்கு சென்ற நிலையில், பெரும்பள்ளம் ஓடையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவத்தில் அங்கன்வாடியில் பதிவு செய்யப்படாத குழந்தையை அனுமதித்தது தொடர்பாக விளக்கம் கேட்டு மேற்பார்வையாளருக்கு மாவட்ட திட்ட அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி