ஈரோடு: ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

870பார்த்தது
ஈரோடு: ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
ஈரோடு, வெட்டுக்காட்டு வலசு பகுதியைச் சேர்ந்த ரகுமான் (25) என்பவர், நண்பர்களுடன் ஞாயிற்றுக்கிழமை அன்று காரணாம்பாளையம் காவிரி தடுப்பணைக்குச் சென்று மது அருந்தியுள்ளார். பின்னர், காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றபோது, பாறையில் நின்றிருந்த ரகுமான் தவறி நீரில் மூழ்கினார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கொடுமுடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது தொடர்பாக மலையம்பாளையம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி