ஈரோடு: ஏசியில் மின்கசிவு.. பயங்கர தீ விபத்து

1பார்த்தது
ஈரோடு: ஏசியில் மின்கசிவு.. பயங்கர தீ விபத்து
ஈரோடு, மோசிகீரனார் வீதியைச் சேர்ந்த அங்கூர் அகர்வால் வீட்டில், நேற்று முன்தினம் இரவு 9:55 மணிக்கு ஏ.சி.யில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்த ஈரோடு தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் ஏ.சி., மர அலமாரி, வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் துணிகள் என பல்வேறு பொருட்கள் எரிந்து நாசமாயின. இதன் மொத்த சேத மதிப்பு சுமார் ரூ.1 லட்சமாக கணக்கிடப்பட்டுள்ளது.