ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டியில், நம்பியூர் சாலை அருகே தனியாா் பள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த ரவிசங்கர் மற்றும் பிரியங்கா தம்பதியினரை வழிமறித்த இருவர், பிரியங்காவை தாக்கி 3 பவுன் நகையை பறித்துச் சென்றனர். இதில் பிரியங்காவின் காது கிழிந்து காயமடைந்ததுடன், ரவிசங்கருக்கும் காயம் ஏற்பட்டது. இருவரும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புன்செய்புளியம்பட்டி போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.