சிவக்கிரியை அடுத்த விளக்கேத்தி புது அண்ணாமலைபாளையத்தில் உள்ள பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வரர் கோயிலில் சிவராத்திரி விழாவையொட்டி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். சிவராத்திரி பூஜையில் வைக்கப்பட்ட எலுமிச்சை பழம், வெள்ளிக் காசு, வெள்ளி மோதிரம் ஆகியவை ஏலமிடப்பட்டன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு எலுமிச்சை பழம் ரூ.16 ஆயிரத்துக்கும், வெள்ளிக் காசு ரூ.21 ஆயிரத்துக்கும், வெள்ளி மோதிரம் ரூ52,500-க்கும் ஏலம் போனது.