ஈரோடு: குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர் உயிரிழப்பு

2பார்த்தது
ஈரோடு: குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர் உயிரிழப்பு
சத்தியமங்கலத்தை அடுத்த சிக்கரசம்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி வெங்கிடுசாமியின் மகன் சந்தோஷ் (15), ஞாயிற்றுக்கிழமை விடுமுறையில் ராமபயனூர் குளத்தில் மீன் பிடிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார். வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தோஷைத் தேடிச் சென்ற பெற்றோர், குளக்கரையில் அவரது காலணி மற்றும் சட்டையைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தீயணைப்புத் துறையினர் பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு சந்தோஷின் உடலை மீட்டனர். இச்சம்பவம் குறித்து சத்தியமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி