ஈரோடு: வீட்டில் பதுங்கி இருந்த 5 அடி நீள பாம்பு.. அதிர்ச்சி

0பார்த்தது
ஈரோடு: வீட்டில் பதுங்கி இருந்த 5 அடி நீள பாம்பு.. அதிர்ச்சி
சென்னிமலை அருகே முருங்கக்காடு பகுதியில் ஒரு வீட்டில் பாம்பு புகுந்ததாக நேற்று சென்னிமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. உடனடியாக தீயணைப்பு நிலைய மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். வீட்டில் பதுங்கியிருந்த சுமார் ஐந்தடி நீளமுள்ள சாரைப்பாம்பை, நவீன கருவிகளைப் பயன்படுத்தி உயிருடன் பிடித்தனர். பின்னர், அந்தப் பாம்பை வனப்பகுதிக்குள் கொண்டு சென்று பாதுகாப்பாக விட்டனர்.

தொடர்புடைய செய்தி