ஈரோடு: செல்போன் கடையில் திருட்டு.. 2 பேர் கைது

1பார்த்தது
ஈரோடு: செல்போன் கடையில் திருட்டு.. 2 பேர் கைது
ஈரோடு, பெரியார் நகரில் உள்ள வாகித்காளி என்பவருக்குச் சொந்தமான கைப்பேசி கடைக்குள் கடந்த 2-ஆம் தேதி இரவு புகுந்த மர்ம நபர்கள் 12 கைப்பேசிகளைத் திருடிச் சென்றனர். இதுகுறித்து வாகித்காளி அளித்த புகாரின்பேரில் ஈரோடு டவுன் போலீஸார் விசாரணை நடத்தினர். சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து, சேலம் ஆண்டிபட்டி பகுதியைச் சேர்ந்த அய்யனார் (எ) ஜெயகுமார் (20) மற்றும் திண்டுக்கல் மேற்கு வீதியைச் சேர்ந்த செல்வராஜ் (31) ஆகிய இருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி