கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணையில் இருந்தும் நீர் திறக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது.
இந்நிலையில், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட 11 மாவட்ட காவிரி கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது. தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.