தாளவாடி மலைப் பகுதியில் உள்ள அருள்வாடி கிராமத்தில் மாது என்பவரின் கரும்புத் தோட்டத்துக்குள் ஒற்றைக் காட்டு யானை சனிக்கிழமை அதிகாலை நுழைந்தது. தகவலறிந்த வனத்துறையினர் விவசாயிகளுடன் இணைந்து சைரன் ஒலியைக் கேட்டு அச்சமடைந்த யானை கரும்புத் தோட்டத்திலிருந்து வெளியேறி வனப்பகுதியை நோக்கிச் சென்றது. சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் உள்ள காட்டு யானைகள் இரவு நேரத்தில் கிராமங்களுக்குள் நுழைந்து கரும்பு, வாழை போன்ற பயிர்களை சேதப்படுத்துவது தொடர்கிறது.