ஈரோடு வளையக்கார் வீதி பகுதியைச் சேர்ந்த 45 வயது லிங்க மூர்த்தி, அப்பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால் மனமுடைந்த அவர், வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். மயங்கிய நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு கருங்கல்பாளையம் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.