ஈரோடு பெரியசேமூர் எல் வி ஆர் காலனியில் குமரேசன் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் சிப்ஸ் தயாரிக்கும் நிறுவனத்தின் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. அருகில் இருந்த காய்ந்த புற்களுக்கு தீ வைத்ததால், அது பிளாஸ்டிக் பொருட்களுக்கும் பரவி, குடோனில் இருந்த பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதமடைந்தன. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தால் அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்தது.