சங்ககிரி சுங்கசாவடி அருகே ரவுடி ஜானை கொலை செய்ய திட்டமிட்ட கும்பல்

62பார்த்தது
சங்ககிரி சுங்கசாவடி அருகே ரவுடி ஜானை கொலை செய்ய திட்டமிட்ட கும்பல்
3 நாட்களாக பின் தொடர்ந்து சென்று வெட்டி சாய்த்தனர் சங்ககிரி சுங்கசாவடி அருகே ரவுடி ஜானை கொலை செய்ய திட்டமிட்ட கும்பல் போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் ஜான் (30). மனைவி சரண்யாவுடன் திருப்பூரில் வசித்து வருகிறார். ஜான் மீது கொலை, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் அண்மையில் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த ஜான், தினமும் காலை சேலம் அன்னதானப்பட்டி காவல்நிலையத்தில் கையெழுத்து போட்டு வந்துள்ளார். 

அதேபோல் நேற்று தனது மனைவி சரண்யாவுடன் காரில் சேலத்திற்கு வந்து கையெழுத்து போட்டுவிட்டு மீண்டும் திருப்பூர் சென்று கொண்டிருந்தார். அவரை பின்தொடர்ந்து இரண்டு கார்களில் 10 பேர் கொண்ட கும்பல் சென்றுள்ளது. ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே நெடுஞ்சாலையில் மனைவியுடன் சென்றுகொண்டிருந்த ரவுடி ஜான் கார் மீது பின்னால் வந்த கார் மோதியுள்ளது. அப்போது விபத்து ஏற்படுத்திய காரில் இருந்து வெளியேறிய 4 பேர் கும்பல் ஜானை காரில் வைத்தே சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்தது. இதனை தடுக்க சென்ற மனைவி சரண்யாவிற்கும் அரிவாள் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி