கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் தனராஜ் , "பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 85 காசுகளும், டீசல் விலை 2 ரூபாய் 84 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது. இது லாரி உரிமையாளர்களை பெருமளவில் பாதிக்கும். அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில், கூட்டத்தைக் கூட்டி ஆலோசித்து
போராட்டம் குறித்து அறிவிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.