பெரிய அக்ரஹாரத்தில் குண்டம் திருவிழா - ​

6பார்த்தது
ஈரோடு, பிராமண பெரிய அக்ரஹாரத்தில் உள்ள வன்னியர்குல சத்திரியர் நிர்வாகத்திற்குட்பட்ட அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் மற்றும் ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் இன்று (புதன்கிழமை) அதிகாலை 5:00 மணிக்கு நடைபெற்றது. இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் அம்மனை வேண்டியபடி குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். கைக்குழந்தைகளைச் சுமந்தபடி பக்தர்கள் தீ மிதித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. "ஓம் சக்தி, பராசக்தி" என்ற பக்தர்களின் முழக்கம் ஆன்மீக அதிர்வை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி