ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (02. 03. 2026) மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பான அனைத்துத்துறை அலுவலர்களுடனான மாவட்ட உயர்மட்டக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ச. கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளின் தற்போதைய நிலை மற்றும் அவற்றினை விரைந்து முடிப்பது குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மாவட்ட வருவாய் அலுவலர் திரு. சு. சாந்த குமார் உள்ளிட்ட அரசுத் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.