ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் டோல்கேட் பகுதியில் இந்து பாதுகாப்பு படையின் மாநில எழுச்சி மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில், சாதி, மத வேறுபாடின்றி அனைத்து இந்துக்களையும் ஒன்றிணைத்து "இந்துக்கள் ஓட்டு இந்துக்களுக்கே" என்ற கொள்கையின் அடிப்படையில் செயல்படுவது, மற்றும் இந்துக்களின் வழிபாட்டு முறைகளில் அரசியல் அமைப்புகள் அல்லது பிற மதத்தினர் தலையிட்டால் மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுப்பது என மூன்று முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. இந்து அறநிலையத்துறை அமைச்சர் இந்துவாக நடித்தால் மட்டும் போதாது, இந்துக்களின் வாழ்வியல் முறைகளை உணர்ந்திருக்க வேண்டும் என்றும், கோயில்களில் கும்பாபிஷேகம் போன்ற நிகழ்வுகள் பக்தர்களுக்காக அன்றி வருமானத்திற்காகவே நடத்தப்படுவதாகவும் அமைப்பின் தேசியத் தலைவர் கண்ணன் குற்றம் சாட்டினார். கோயில்களில் அரசியல் புகுத்தப்படுவதை ஏற்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.