நலத்திட்ட முகாம்களில் 42, 000 மனுக்களுக்கு உடனடி தீர்வு –

4பார்த்தது
ஈரோட்டில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு. முத்துசாமி, மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். முதல்வர் அறிவித்த மக்கள் குறைதீர் முகாம்கள் ஈரோடு மாவட்டத்தில் பெரும் வெற்றி பெற்றுள்ளன. மொத்தம் 340 முகாம்கள் நடத்தப்பட்டு, 68,674 மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில் 42,652 மனுக்களுக்கு 40 நாட்களுக்குள் தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும், இதர சேவைகள் தொடர்பான 69,187 மனுக்களில் 47,432 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி