கூலித்தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை

ஈரோடு, மாணிக்கம்பாளையம், தென்றல் நகர் பகுதியை சேர்ந்த 40 வயது கூலித் தொழிலாளி சதீஷ்குமார், மதுப்பழக்கத்தால் கடன் சுமை அதிகமாகி, நேற்று முன்தினம் இரவு மின்விசிறியில் வேட்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தாய் வளர்மதியின் புகாரின் பேரில், ஈரோடு வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சதீஷ்குமார் திருமணமாகாதவர் மற்றும் தனது தாயுடன் வசித்து வந்துள்ளார்.
