தமிழக வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு. முத்துசாமி, மதுவுக்கு எதிரான வைகோவின் நடைபயணத்தை தவறான நோக்கத்தோடு பார்க்கவில்லை என்றும், அதன் மூலம் பிரச்சனையை தீர்வு காண அடித்தளமாக எடுத்துக்கொள்வோம் என்றும் தெரிவித்துள்ளார். மேகதாது அணை பிரச்சனையில் தமிழக அரசு மெத்தனம் காட்டவில்லை என்றும், சட்டபூர்வ நடவடிக்கையை திமுக விரைந்து எடுத்து வருவதாகவும் அவர் கூறினார். தேர்தல் நேரத்தில் கட்சிகள் சீட் கேட்டு பேசி முதல்வரை சந்திப்பது இயல்பானது என்றும், பொல்லான் மணிமண்டபம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவை அரசு கண்டிப்பாக கடைபிடிக்கும் என்றும் அமைச்சர் சு. முத்துசாமி தெரிவித்தார். 26ம் தேதி முதல்வர் வரும்போது கடையடைப்பு போராட்டம் நடத்தும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்த அவர், முதல்வர் யாரையும் பிரித்து பார்க்காமல் அனைவரையும் சமமாக பார்க்கிறார் என்றும், இதில் தவறான புரிதல் ஏற்படக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.