வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர் முத்துசாமி துவங்கி வைத்தார்

0பார்த்தது
வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர் முத்துசாமி துவங்கி வைத்தார்
ஈரோடு மாவட்டத்தில், ஒருங்கிணைந்த நீர்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ், மகாராஜா திரையரங்கம் அருகேயுள்ள நஞ்சை ஊத்துக்குளி கால்வாயில் ரூ. 23 லட்சம் மதிப்பில் வேலி அமைக்கும் பணியை அமைச்சர் சு. முத்துசாமி நேற்று தொடங்கி வைத்தார். மேலும், 16வது வார்டில் புதிய நியாய விலைக்கடையையும், 39வது வார்டில் சலவையாளர்கள் நுகர்வோர் பண்டகசாலை மூலம் புதிய நியாய விலைக்கடையையும், அங்கன்வாடி மையத்தையும் திறந்து வைத்தார். 37வது வார்டில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட உடற்பயிற்சி கூடத்தையும் அவர் திறந்து வைத்தார்.

தொடர்புடைய செய்தி