தொகுதி குடிநீர் பிரச்சினையை தீர்க்க எம்எல்ஏ கோரிக்கை

4பார்த்தது
பெருந்துறை தொகுதி நிச்சாம்பாளையம் கிராமத்தில் வறண்ட குட்டைகளுக்கு கீழ்பவானி வாய்க்கால் உபரிநீரை கொண்டுவர விவசாயிகள் சொந்த செலவில் குழாய்கள் பதித்து மின் மோட்டார் பொருத்தினர். சோதனை ஓட்டத்தில் தண்ணீர் வந்த நிலையில், அனுமதியின்றி அமைக்கப்பட்டதாக கூறி பொதுப்பணித்துறை அதிகாரிகள் அகற்ற வந்தனர். விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் நடவடிக்கை எடுக்கவில்லை. இது குறித்து எம்எல்ஏ எஸ். ஜெயக்குமார், "குடிநீர் தட்டுப்பாட்டை போக்க விவசாயிகள் தங்கள் சொந்த நிதியில் இத்திட்டத்தை நிறைவேற்றினர். ஆனால் அரசு அதிகாரிகள் அவர்களுக்கு எதிராக செயல்படுவது கண்டிக்கத்தக்கது" என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி