தமிழ்நாடு முதலமைச்சர் மு. க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கு இணங்க, மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய தொகுதி இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி. சி. சந்திரகுமார், மாநில நெசவாளர் அணி செயலாளர் S. L. T. சச்சிதானந்தம், மாவட்ட கழக துணை செயலாளர் ஆ. செந்தில்குமார், மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய செயலாளர் சு. குணசேகரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஜெ. திருவாசகம், மற்றும் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், பேரூர் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.