ஈரோடு: வனப்பகுதி கிராமத்திற்கு புதிய அரசு பேருந்து சேவை

878பார்த்தது
தாளவாடி அடுத்த காளி திம்பம் கிராமத்தில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காகவும், குழந்தைகள் கல்விக்காகவும் அடர்ந்த வனப்பகுதியில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை நடந்து செல்ல வேண்டிய அவல நிலையை பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் அண்ணாதுரையிடம் பொதுமக்கள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, புதிய அரசு பேருந்து சேவை இன்று முதல் இயக்கப்படுகிறது. இந்த பேருந்தை கிராம மக்கள் இசை இசைத்து வரவேற்றனர்.

தொடர்புடைய செய்தி