பிறந்த ஒரே நாளில் பச்சிளம் குழந்தை உயிரிழப்பு

0பார்த்தது
பிறந்த ஒரே நாளில் பச்சிளம் குழந்தை உயிரிழப்பு
சேலம் மாவட்டம் சங்ககிரி கஸ்தூரி நகரைச் சேர்ந்த அருள்ஜோதி (34) என்பவரின் மனைவி ரேவதி (28) ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 19ஆம் தேதி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தை மூச்சு இல்லாமல் இருந்ததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக மருத்துவர்களிடம் தெரிவித்தனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் குழந்தை இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது தொடர்பாக ஈரோடு அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி