ஈரோடு ரங்கம்பாளையம் இரணியன் வீதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் வட மாநில வாலிபர் ஒருவர் சுற்றித்திரிந்ததை கண்ட பொதுமக்கள் அவரை பிடிக்க முயன்றனர். அவர் பதிலளிக்காமல் தப்பிக்க முயன்று, அருகில் இருந்த கட்டையால் தாக்க முயன்றார். பின்னர், பொதுமக்கள் அவரை துரத்தி ஒரு பங்களா வீட்டில் சுவர் ஏறி குதித்து பாத்ரூமில் ஒளிந்திருந்த அவரைப் பிடித்தனர். பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தாலுகா போலீசார் அவரை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். வட மாநில வாலிபர் கொள்ளையடிக்க வந்தாரா என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர். கடந்த வாரமும் இப்பகுதியில் மர்ம நபர்கள் வீடுகளை நோட்டமிட்ட சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.