சத்துணவு ஊழியர்கள் பத்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி மறியல்

2பார்த்தது
ஈரோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக சத்துணவு ஊழியர்கள் மாநில தழுவிய மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும், பணிக்கொடையை உயர்த்த வேண்டும், காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமாகவே செயல்படுத்த வேண்டும், ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்த வேண்டும், பெண் ஊழியர்களுக்கு 12 மாத மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் தோழர் கோ. தனுஷ்கோடி தலைமையில் நடைபெற்ற இதில், மாவட்டச் செயலாளர் தோழர் P. பழனிசாமி கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார். மாநில பொதுச்செயலாளர் தோழர் M. மாரிக்குணம் போராட்டத்தைத் துவக்கி வைத்தார். அரசு கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டத்தைத் தொடரப் போவதாக கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you