புதிய சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு

1பார்த்தது
ஈரோடு மாவட்டம், நம்பியூர் வட்டம், எலத்தூர் பேரூராட்சியில் அமைக்கப்பட உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அஞ்சனூர், ஆண்டியாளையம், கூடக்கரை மற்றும் எலத்தூர் பகுதி பொதுமக்கள் இன்று ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்த மையம் அமைக்கக் கூடாது என ஏற்கனவே கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக அரசால் 4-வது பல்லுயிர் பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்ட இடத்தில் இந்த மையம் அமைந்தால் பல்லுயிர் சூழல் பாதிக்கும் என்றும், சுமார் 400 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு, கோயில்கள், விவசாய நிலங்கள் உள்ள இப்பகுதியில் நிலத்தடி நீர் மற்றும் ஆழ்குழாய் கிணறுகள் மாசடையும் அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.