ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த பெருமாள் மீது பூபதி என்பவர் கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளார். பின்னர், தப்பிச் சென்ற பூபதி, மாநகர பேருந்தில் ஏறி மூலப்பாளையம் வரை சென்று அங்கு பயணி பழனிச்சாமி தலையில் அடித்து காயப்படுத்தியுள்ளார். இரு சம்பவங்களிலும் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பூபதியை போலீசார் பிடித்து விசாரித்தபோது அவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது.