தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியைக் குறிக்கும் ஹோலிப் பண்டிகை, நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாநகரில் வசிக்கும் வடமாநில மக்கள், மார்ச் 4 அன்று வண்ணப் பொடிகளை ஒருவருக்கொருவர் பூசி, இனிப்புகளைப் பகிர்ந்து மகிழ்ந்தனர். இந்திரா நகர், கருங்கல்பாளையம், ஈஸ்வரன் கோவில் வீதி போன்ற பகுதிகளில் இளைஞர்கள் குழுக்களாக இணைந்து மேளதாளங்களுக்கு ஏற்ப நடனமாடி ஹோலியைக் கொண்டாடினர். மார்ச் 2 மாலை பௌர்ணமி திதி தொடங்கி, மார்ச் 3 மாலை நிறைவடைந்த நிலையில், மார்ச் 3 இரவு ஹோலிகா தகனம் நடைபெற்றது.