ஈரோடு, பவானி அருகே வைரமங்கலம் கிராமத்தில் 30 ஆண்டுகளாக நின்றிருந்த கோவில் திருவிழாவை மீண்டும் நடத்தக் கோரி நாடார் சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொதுக் கோவிலின் சக்தியை ரகசியமாக எடுத்துச் சென்று, மற்றொரு சமூகத்தினர் புதிய கோவிலில் கும்பாபிஷேகம் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் பிரச்சனையில் திமுக ஒன்றிய செயலாளர் கே. பி. துரைராஜ் ஜாதி பாகுபாட்டைத் தூண்டிவிட்டு, மிரட்டல் விடுப்பதாக ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஜாதி மோதலைத் தவிர்க்கவும், திருவிழா நடத்த அனுமதி கோரியும் 100-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். தீர்வு கிடைக்கவில்லை எனில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.