ஈரோடு: எலி மருந்து சாப்பிட்டு பெண் தற்கொலை.. போலீசார் விசாரணை

73பார்த்தது
ஈரோடு: எலி மருந்து சாப்பிட்டு பெண் தற்கொலை.. போலீசார் விசாரணை
ஈரோடு காசிபாளையம் அண்ணாதுரை வீதியை சேர்ந்த செல்வராஜ் மனைவி ராதா (51). இவரது கணவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். ராதா அவர்களது மகன்கள், மகளுடன் வசித்து வந்தார். ராதாவிற்கு கடந்த 3 ஆண்டுகளாக வயிறு வலி இருந்ததால், அதற்கு மருந்து மாத்திரை வாங்கி சாப்பிட்டு வந்தார். கடந்த மாதம் 29ம் தேதி கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதால், வீட்டில் இருந்த எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதையறிந்த அவரது குடும்பத்தினர், ராதாவை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக சேலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you