ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம்

2பார்த்தது
வருவாய்த்துறை ஊழியர்கள் 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த 10 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாவட்டத் தலைநகரங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றதால், தாலுகா அலுவலகங்கள் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் வரை பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. முக்கியக் கோரிக்கைகளில், ஊழியர்களுக்குப் பாதுகாப்பான பணிச்சூழலை உறுதி செய்யத் தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும், காலமுறை ஊதியம் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஊதிய விகிதங்களை உடனடியாக வழங்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கான கல்வித் தகுதியை உயர்த்த வேண்டும், மற்றும் கருணை அடிப்படையிலான பணி நியமனத்தை 5 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக உயர்த்த வேண்டும் ஆகியவை அடங்கும்.

தொடர்புடைய செய்தி