ஆக்கிரமிப்பு மீட்டுத் தரக்கோரி தர்ணா

3பார்த்தது
ஈரோடு மாவட்டம் சிவகிரியைச் சேர்ந்த சுரேஷ்குமார்-லதா தம்பதியினர், தங்கள் தாயாருக்குச் சொந்தமான 1500 சதுர அடி நிலத்தில் வீடு கட்டும் பணியைத் தொடங்கினர். அப்போது, அருகில் உள்ள நிலத்தின் உரிமையாளரும் திமுக விவசாய அணியைச் சேர்ந்தவருமான தினேஷ்பாபு, அந்த நிலத்தைத் தனக்கு விற்றுவிடுமாறு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வட்டாட்சியரிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காத நிலையில், ஜூன் மாதம் நிலத்தின் அளவீட்டுக் கற்களைப் பிடுங்கி, கட்டுமானப் பொருட்களைச் சேதப்படுத்தி ஆக்கிரமிப்பு செய்ய முயன்றதாகத் தெரிகிறது. இதனால், தங்கள் நிலத்தை முறையாக அளவீடு செய்து பாதுகாப்பு வழங்கக் கோரி, இன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுரேஷ்குமார்-லதா தம்பதியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி