கலெக்டர் அலுவலகத்தில் நடந்தமக்கள்குறைதீர்க்கும் நாள்கூட்டம்

3பார்த்தது
கலெக்டர் அலுவலகத்தில் நடந்தமக்கள்குறைதீர்க்கும் நாள்கூட்டம்
ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் சு. சாந்தகுமார் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, விதவை உதவித்தொகை, கருணை அடிப்படையில் வேலை, மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை, கலைஞரின் கனவு இல்லம், இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், ஆக்கிரமிப்பு மற்றும் காவல்துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 252 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை உரிய துறை அதிகாரிகளிடம் வழங்கி, அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டார். முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மற்றும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி