ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த இஸ்லாமிய கூட்டமைப்பு நிர்வாகிகள், முகவரி மாறிய வாக்காளர்களுக்கு எஸ்ஐஆர் படிவங்கள் வழங்காததால் அவர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்றும், இது பெரும் சிரமத்தை உருவாக்குவதாகவும் கூறி மனு அளித்தனர். தலைவர் இஸ்தகீர், முன்னாள் கவுன்சிலர் ஜாபர் சாதிக், காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவர் அர்ஷத் ஆகியோர் தலைமையில் அளிக்கப்பட்ட இந்த மனுவில், எஸ்ஐஆர் படிவங்களை வீடு மாறியவர்களுக்கும் வழங்க வேண்டும் என்றும், அவர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும், படிவம் தரும் தேதி நீட்டிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் விலாசம் மாறிய வாக்காளர் வீடுகளில் எஸ்ஐஆர் படிவங்கள் ஒட்டப்படும் என ஏற்கனவே கூறியது குறிப்பிடத்தக்கது.