ஈரோட்டை அடுத்த கரட்டாங்காட்டை சேர்ந்த கூலித்தொழிலாளி முருகேசன் (47), உடல்நலக்குறைவால் பணிக்கு செல்லாத நிலையில், முன் பணத்தை திரும்பப் பெற தோட்ட உரிமையாளர் கந்தசாமி அவரை வலுக்கட்டாயமாக வேலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், முருகேசன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, கொலை வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்யக் கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.