சிவகிரி: தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

5பார்த்தது
சிவகிரி: தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
ஈரோடு மாவட்டம், பழமங்கலம் அருகே செம்மடைக்காட்டுத்தோட்டத்தில் கரும்பு வெட்ட வந்த கூலித் தொழிலாளி பரந்தாமன் (35) மாமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. சனிக்கிழமை காலை அவரது அண்ணன் வேலவன் இது குறித்து சிவகிரி போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். குடிப் பழக்கத்தால் மனைவிகளைப் பிரிந்து வாழ்ந்து வந்த பரந்தாமன், ஐந்து நாட்களுக்கு முன்பு வேலைக்காக இங்கு வந்துள்ளார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து சிவகிரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you