சிவகிரி: எருமை மாடு மீது பைக் மோதி இளைஞர் பலி

0பார்த்தது
சிவகிரி: எருமை மாடு மீது பைக் மோதி இளைஞர் பலி
ஈரோடு மாவட்டம், சிவகிரியை அடுத்த ரங்கசமுத்திரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி நல்லுசாமி (35), ஞாயிற்றுக்கிழமை அன்று சிவகிரியில் இருந்து முத்தூர் செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி சாலையோரமாக நின்றிருந்த எருமை மாட்டின் மீது மோதியதில் பலத்த காயமடைந்த அவர், சிவகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து நல்லுசாமியின் மனைவி அளித்த புகாரின்பேரில் சிவகிரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி