சோலார் பேருந்து நிலையம்: வியாழன் முதல் பேருந்துகள் இயக்கம்

2பார்த்தது
ஈரோடு மாவட்டம் சோலார் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிலையம் வரும் வியாழக்கிழமை, டிசம்பர் 4ஆம் தேதி காலை 11 மணி முதல் செயல்படத் தொடங்கும் என மாவட்ட ஆட்சியர் ச. கந்தசாமி அறிவித்துள்ளார். கரூர், மதுரை, வெள்ளக்கோவில் மார்க்கங்களில் செல்லும் அரசு பேருந்துகள் இனி இந்த புதிய நிலையத்திலிருந்தே இயக்கப்படும். மதுரை, திருச்சியிலிருந்து கரூர், வெள்ளக்கோவில் வழியாக ஈரோடு வரும் பேருந்துகளும் சோலார் பேருந்து நிலையத்தை அடையும். புதிய நிலையத்திலிருந்து ஈரோடு மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு நகரப் பேருந்துகள் இயக்கப்படும். பயணிகளின் வசதிக்காக ஆட்டோ, டாக்ஸி சேவைகளும் செயல்படுத்தப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி