அந்தியூர் சட்டமன்றத் தொகுதி, அந்தியூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் நடைபெற்ற நலம் காக்கும் சிறப்பு மருத்துவ முகாமை அந்தியூர் எம்.எல்.ஏ ஏஜி.வெங்கடாசலம், வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன், பேரூராட்சி மன்ற தலைவர் பாண்டியம்மாள் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இந்த முகாமில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வு ஈரோடு, பவானிசாகர் பகுதியில் நடைபெற்றது.