ஈரோடு மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான திரு. ச. கந்தசாமி இ. ஆ. ப. அவர்கள், இன்று (07. 04. 2026) வ. உ. சி. பூங்கா விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நீச்சல் போட்டியினைத் தொடங்கி வைத்தார். வரும் தேர்தலில் 100% வாக்குப்பதிவை உறுதி செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். இந்தப் போட்டியில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.