முற்புதற்க்குள் பலத்த காயத்துடன் கிடந்த பெண்ணின் உடல்

1பார்த்தது
ஈரோடு தாலுகா காவல் நிலையத்திற்கு அருகே, திண்டல் புறவழிச்சாலை சாலையோரத்தில் உள்ள புதரில் பெண் சடலம் கிடந்தது. இயற்கை உபாதை கழிக்க சென்ற நபர் இதைக்கண்டு அதிர்ச்சியடைந்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தாலுகா போலீசார், டிஎஸ்பி முத்துகுமரன், மோப்பநாய் காவிரி, கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். மாவட்ட எஸ்பி சுஜாதா விசாரணை மேற்கொண்டார். உயிரிழந்தவர் 35 வயது மதிக்கத்தக்கவர் என்றும், தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர் யார், எந்த பகுதியை சேர்ந்தவர், கொலைக்கான காரணம் என்ன, கொலை செய்தவர் யார் என்பது குறித்து விசாரிக்க மூன்று தனிப்படை போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.