திமுக சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது.

2பார்த்தது
தமிழர் திருநாளை முன்னிட்டு திமுக சார்பில் நடைபெற்ற மகளிர் விளையாட்டுப் போட்டிகளில், ரங்கோலி, புள்ளி கோலம், காய்கனி உருவம் பதித்தல், மெஹந்தி போன்ற போட்டிகள் இடம்பெற்றன. இதில் கிழக்கு மற்றும் மேற்கு தொகுதிகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு குக்கர், கிரைண்டர், ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழக வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத் துறை அமைச்சர் முத்துச்சாமி கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் விசி சந்திரகுமார், மாநகர மேயர் நாகரத்தினம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி