தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்க வேண்டும் என ஈரோட்டில் சிறப்பு வழிபாட்டு நிகழ்வு நடைபெற்றது. மரப்பாலம் பகுதி கழக மகளிர் அணி சார்பில் நடைபெற்ற இந்த குத்துவிளக்கு பூஜையில் 150-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். அக்கட்சியின் மாவட்ட இணைச் செயலாளர் அக்கீம் பூஜையைத் தொடங்கி வைத்தார். மக்கள் நலன் காக்க விஜய்யின் தலைமை அவசியம் என நிர்வாகிகள் வலியுறுத்தினர்.