ஈரோடு மாவட்டத்தில் முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு

4பார்த்தது
ஈரோடு மாவட்டத்தில் முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு
டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் நேற்று இரவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் போன்ற இடங்களில் வெடிகுண்டு செயலிழப்புப் படையினர் சோதனை நடத்தினர். வாகனத் தணிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டு, சந்தேகத்திற்கிடமான நபர்கள் விசாரிக்கப்பட்டனர். உள்துறை அமைச்சகத்தின் உத்தரவைத் தொடர்ந்து நாடு முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி