ஈரோட்டின் பிரசித்தி பெற்ற திண்டல் மலை வேலாயுதசாமி திருக்கோவிலில் திருப்பணிகள் நிறைவடைந்து, மகா கும்பாபிஷேக விழா பிப்ரவரி 22-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு திருமுறை பாராயணத்துடன் தொடங்கி, காலை 6:45 மணிக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க வேலாயுதசாமி, அபிராமி அம்மன், அமிர்தகடேஸ்வரர் மூலஸ்தான கோபுரங்கள் மற்றும் ராஜகோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றி நடத்தப்படுகிறது. கடந்த 16-ம் தேதி கிராம சாந்தியுடன் தொடங்கிய விழாவில் பல்வேறு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.