ஈரோடு ரயில் நிலையத்தில் அகில இந்திய லோகோ ஓடும் தொழிலாளர் கழகம் சார்பில், ரயில் ஓட்டுநர்களின் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி 48 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. மாநிலப் பொருளாளர் ரித்தீஷ் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ரயிலில் இயக்கத்தை பாதிக்கும் 30 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்புதல், கிலோமீட்டர் ரேஞ்ச் அலவன்ஸ் உயர்த்துதல், வருமான வரி விலக்கு, ரயில் ஸ்டேபிளிங் பணிகளைத் தவிர்த்தல், வாராந்திர ஓய்வு அளித்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.