தமிழகத்தின் முன்னணி மருத்துவக் குழுமமான மெட்வே மருத்துவமனை, ஈரோடு மாவட்டம் நசியனூரில் உள்ள தனது கிளையில் புதிய நவீன கண் மருத்துவ சேவைப் பிரிவைத் தொடங்கியுள்ளது. 1200 படுக்கை வசதிகளுடன் சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் 11 கிளைகளைக் கொண்டுள்ள மெட்வே குழுமம், சென்னை கிளையில் இதயம் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளில் சிறந்து விளங்குகிறது. புதிய கண் மருத்துவப் பிரிவில் அதிநவீன கருவிகளுடன் கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்படும். கிராமப்புற ஏழை விவசாயிகளுக்கு தழும்பில்லா நவீன அறுவை சிகிச்சை வழங்கப்படும்.