ஈரோடு மாவட்டத்தில் குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ஈரோடு ராஜாஜிபுரம் பகுதியில், கருங்கல்பாளையம் போலீசார் சோதனை செய்தனர்.
இதில், தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், அதேப்பகுதியைச் சேர்ந்த மளிகை கடை உரிமையாளர் கணேஸ் ( 54) என்பவரை கைது செய்தனர்.
முள்ளம்பரப்பு பகுதியில் குட்கா பொருட்கள் விற்ற, அதேப்பகுதியைச் சேர்ந்த மளிகை கடை உரிமையாளர் ராஜபெருமாள் ( 45) என்பவரை ஈரோடு தாலுகா போலீசார் கைது செய்தனர்.